ரஷ்ய அதிபர் புதினுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை மாஸ்கோவில் சந்தித்து பேச்சு நடத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியா-ரஷ்யாவின் நட்பு உயர்ந்த மலைச்சிகரத்தை விடவும் உயரமானது, ஆழமான கடலைவிடவும் ஆழமானது என்று கூறினார்.
இருதரப்பு நல்லுறவுகள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.21வது இந்திய ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் முன்னதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் பலன் உள்ளதாக இருந்ததாக தமது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
Comments