நாமக்கல்லில் சிமெண்ட் கலவை ஏற்றிவந்த கனரக லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து
பள்ளிப்பாளையத்தில் 4 டன் சிமெண்ட் கலவைகளை ஏற்றி வந்த கனரக லாரி .வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் 4 சக்கர வாகனம் பழுதுநீக்கும் கடையை உடைத்துக் கொண்டு, கழிவுநீர்க் கால்வாயில் கவிழ்ந்தது.
இதில் உள்ளே நிறுத்தபட்டிருந்த காரின் பின்பக்க கண்ணாடி சேதமடைந்தது. லாரியின் டீசல் டேங்க் சேதமடைந்ததால், லாரியிருந்து வெளியேறிய டீசல் சாக்கடை நீரில் கலந்தது.
Comments