ஆட்சியாளர்களுக்கு லாபம்.. மக்களுக்கு மின் கட்டண உயர்வு - அன்புமணி குற்றம்சாட்டு

0 374

கடந்த 3 ஆண்டுகளில் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதற்கு காரணமே, ஆட்சியாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் பயனுக்காக, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதுதான் என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆட்சியாளர்கள் லாபம் பெறுவதற்காக மின்வாரியத்தை நஷ்டமாக்கி, அதை சரி செய்வதற்காக கட்டணத்தை உயர்த்தி மக்களிடம் பணம் பிடுங்குவதை அனுமதிக்க முடியாது என்று கூறிய அவர்,  அதானி குழுமத்திடம் இருந்து மின்சார வாரியம் கையூட்டு பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments