சாத்தனூர் அணை Vs செம்பரம்பாக்கம் ஏரி - சட்டப் பேரவையில் காரசார விவாதம் ..
அறிவிப்பு கொடுத்த கால் மணி நேரத்தில் சாத்தனூர் அணையில் அதிகளவு நீரை திறந்து விட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் இ.பி.எஸ் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மறுப்பு தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
அதற்கு பதில் அளித்த இ.பி.எஸ் செம்பரம்பாக்கம் ஏரியில் 29 ஆயிரம் கன அடி நீர் தான் திறக்க முடியும், ஆனால் சாத்தனூர் என்பது பெரிய அணை என்பதால் அதிகளவிலான நீர் திறந்து விடப்பட்டுள்ளது என்றார்.
Comments