ஒரே பெண்ணை காதலித்ததால் ஏற்பட்ட தகராறு..
காதல் போட்டியில் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் வைத்து இளைஞரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்போடிய மற்றொரு இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த செல்வராஜ் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துவிட்டு பணிக்காக நேற்று சென்னை செல்ல சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில், ரயில் ஏற முயன்றபோது, அவரது உறவினரான கண்ணன் என்பவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
விசாரணையில் செல்வராஜ்ம், கண்ணனும் ஒரே பெண்ணை காதலித்ததாகவும், இதனால் ஏற்பட்ட போட்டியில் வெட்டிக் கொல்ல முயன்றதும் தெரியவந்தது.
Comments