கார்த்திகை தீபத் திருவிழா - அன்னதானம் வழங்க 267 பேருக்கு உரிமம் - உணவு பாதுகாப்புத்துறை..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்தின் அன்று உரிமம் பெற்றுள்ள 267 பேர் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என்றும், உரிமம் இல்லாதவர்கள் அன்னதானம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.
உணவில் நிறமிகள் பயன்படுத்தக்கூடாது, அன்னதானத்தின் போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் ஆயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments