தி.மு.க FILES 3 - வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும்: அண்ணாமலை
தமிழகத்தில் தீங்கு விளைவிக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றால் முதலில் டாஸ்மாக் பிரச்சனைக்காக அவர் பதவி விலக வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
திருச்சியில் பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், தி.மு.க files-3 வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் எனவும், அதில் எந்தெந்த அரசு ஒப்பந்தங்கள் யார் யாருக்கு சென்றுள்ளது என்பது குறித்து முழுமையாக தொகுத்து வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் பதிவு செய்துள்ள நிலை, தமிழக அரசு இத்திட்டத்தை புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்
Comments