காலாவதியான நூடுல்ஸை விற்ற அங்காடி -கப் நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவன், சிறுமிக்கு உடல் நலக்குறைவு..
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காலாவதியான நூடுல்ஸை விற்றதாக எழுந்த புகாரில் தனியார் பல்பொருள் அங்காடியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதூர் பகுதியில் வசித்து வரும் சந்தான ராஜ் மகன் ருத்ர பிரியன், சுஜித் மண்டல் மகள் அஹான்சா மண்டல் ஆகியோருக்கு கப் நூடுல்ஸை சாப்பிட்ட பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து நூடுல்ஸ் டப்பாவை எடுத்துப் பார்த்தபோது காலாவதியாக இருந்தது தெரியவந்தது.
Comments