பல லட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட தனியார் இ சேவை மையத்திற்கு சீல் வைப்பு..
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் கடன் பெற்று தருவதாக கூறி பலரிடம் நான்கு லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் வசூலித்து மோசடி செய்த புகாரில் அரசு இ-சேவை மையம் நடத்திவரும் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பஜார் பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வரும் கார்த்திகா சுமார் 33 பேரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததால் அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி கிராம நிர்வாக அலுவலர் சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து இ-சேவை மையத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.
Comments