ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன பேருந்து மீது மோதிய டாரஸ் லாரி..
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரிய டாரஸ் லாரி அதிவேகமாக மோதியதால் தனியார் நிறுவன பேருந்து கவிழ்ந்த விபத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தண்டலம் பகுதியில் யு-டர்ன் செய்தபோது, பின்னால் வந்த லாரி மோதிய நிலையில், பேருந்து கவிழ்ந்து சறுக்கியபடி சென்று சென்னையில் இருந்து பெங்களூரூ நோக்கி சென்ற கார் மீது மோதியது.
இந்த விபத்தில் தனியார் நிறுவன பேருந்து ஓட்டுநர், ஊழியர்கள் காயமடைந்ததாகவும், சாலையை கடந்து சென்ற ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Comments