தமிழ் புலியின்.. தந்திரம் வீணானது... அந்த “முடி”யையா.. எடுத்துப் போட்ட ?! “பரோட்டாவில் முடி ..” சிக்கியது எப்படி ? சேட்டையை காட்டிக் கொடுத்த சிசிடிவி..!
தேனி அல்லி நகரத்தில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் பரோட்டா சாப்பிட கூட்டாளியுடன் சென்ற தமிழ் புலிகள் கட்சி பிரமுகர் நித்தியானந்தம் என்பவர் சாப்பிட்டு முடிக்கின்ற நேரத்தில் பரோட்டாவில் முடி கிடப்பதாக கூறி குற்றஞ்சாட்டி ஓட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்
வேறு பரோட்டா தருவதாக கூறியும் கேட்காமல் உணவு பொருள் பாதுகாப்புதுறையினரை அழைக்கபோவதாக கூறி மிரட்டி வாக்குவாதம் செய்தனர்
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது தமிழ் புலி நித்தியானந்தம் தனது நெஞ்சில் இருந்த முடியை எடுத்து பரோட்டாவிற்குள் போடுவது தெளிவாக பதிவாகி இருந்தது
இதையடுத்து இந்த முடி மிரட்டல் சம்பவம் குறித்து தேனி மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கத்தில் சரவணன் புகார் தெரிவித்தார்
சம்பந்தப்பட்ட தமிழ் புலி சம்பவத்துக்கு முந்தைய நாள் வந்து ஓசியில் குழம்பு கேட்டதாகவும், அதற்கு சரவணன் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து ஓட்டலுக்கு அவப்பெயர் உருவாக்கவும், பணம் பறிக்கும் நோக்கிலும் ஓட்டலில் இது போன்று மிரட்டியதாக மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நித்தியானந்தம் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஓட்டல் சாப்பாட்டில் முடியை போட்டு உரண்டை இழுத்த தமிழ்ப்புலி நித்தியானந்தம் அல்லி நகரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Comments