மஸ்கட்டுக்கு வேலைக்குச் சென்று சிக்கித் தவிக்கும் பெண்
ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு வேலைக்குச் சென்று அங்கு அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதைக்குள்ளாகும் தனது தாயை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் மாவட்டம் புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கடன் மற்றும் வறுமை காரணமாக தாம் வேலைக்கு வந்ததாகவும் மொழி தெரியாததால் தன்னை அறையில் அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்துகின்றனர் என்றும் அப்பெண்ணின் தாய் பத்ரகாளி வீடியோ அனுப்பியுள்ளார்.
Comments