அரசு மருத்துவமனையில் ஆதரவின்றி சுற்றிய இரு குழந்தைகள்
தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் 5 வயது பெண் குழந்தையும் 3 வயது ஆண் குழந்தையும் ஆதரவின்றி நீண்ட நேரமாக சுற்றித் திரிவதைப் பார்த்த மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர்.
விசாரணையில் குழந்தைகள் இருவரும் ஏரியூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் கணவனுடனான குடும்பப் பிரச்சனையில் தாய் அவர்களை விட்டுச் சென்றதும் தெரியவந்தது. உறவினர் வரவழைக்கப்பட்டு குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன.
Comments