தனியார் பேருந்தும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து
தஞ்சையிலிருந்து கும்பகோணத்துக்குச் சென்ற தனியார் பேருந்தும் எதிர் திசையில் வந்த ஆம்னி வேன் ஒன்றும் அய்யம்பேட்டை அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இரு வாகனங்களுமே அதிவேகமாக வந்தததால் விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், மோதிய வேகத்தில் ஆம்னி வேனின் முன்பக்கம் நசுங்கி, ஓட்டுநர் மாதவன், வெளியில் வர முடியாமல் சிக்கிக் கொண்டு துடித்தார்.
அவ்வழியாகச் சென்றவர்கள் நீண்ட நேரம் போராடி அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments