காதல் திருமணம் செய்த மகள் நிலை..? மகள் உயிருடன் இருக்கிறாரா என விசாரிக்க வேண்டும் - தாய் மனு
காதல் திருமணம் செய்துக் கொண்ட தனது மகள் உயிருடன் இருக்கிறாரா என விசாரிக்க வேண்டுமென தாதகாப்பட்டியைச் சேர்ந்த அமுதா சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ஜோஸ் ஆபிரகாமை காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மகள் கிருஷ்ணப்பிரியாவை கடந்த 5 மாதமாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மகளை பார்ப்பதற்காக சென்ற தன்னை ஜோஸ்ஆபிரகாம் தரப்பினர் விரட்டிவிட்டதாகவும் புகாரில் அமுதா குற்றம்சாட்டியுள்ளார்.
Comments