தமிழகத்தில் மழை நிலவரம் - 11 ஆம் தேதி முதல் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்..
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாகை, திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 11 ஆம் தேதி அன்று கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், 12 ஆம் தேதி அன்று திருச்சி, பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
13 ஆம் தேதி அன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரித்துள்ளது.
Comments