“கண்ணு தெரியலன்னா என்ன ? பொண்ணு அழகாயிருக்கு..” இப்படியும் ஒரு கொடுமைக்காரனா..?! உடலெல்லாம் சூடு.. பெண் பலியான மர்மம்..

0 1538

கண் தெரியாத பெண்ணை , காதலித்து திருமணம் செய்து.. தினமும் சித்ரவதைக்குள்ளாக்கி கொலை செய்து விட்டதாக கூறி பெண் வீட்டார் கதறி கலங்கும் காட்சிகள் தான் இவை..!

கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் அடுத்த அம்பள்ளி பில்லக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், இவரது மனைவி கலைச்செல்வி இவர்களுக்கு 14 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த கண்பார்வை குறைபாடு உள்ள ரூபினி என்ற பெண்ணை காதலித்து அன்பழகன் கர்ப்பமாக்கியதோடு ஏமாற்றியதால் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் பலாத்கார வழக்கில் இருந்து தப்பிக்க எண்ணிய அன்பழகன் , ரூபினியை 2 வது திருமணம் செய்து கொண்டார்.

அவரது வீட்டின் எதிரே ஒரு சீட்டு வீட்டில் ரூபினியை தங்க வைத்த அன்பழகன். தனது வீட்டு வேலைகளை ரூபினியை செய்ய வைத்ததாக கூறப்படுகின்றது. “போலீசில் சிக்கவைத்து தாலி கட்ட வைத்து விட்டாளே..” என்ற ஆத்திரத்தில் தினமும் போதையில் ரூபினியை அடித்து கொடுபைப்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று ரூபினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது சடலத்தை வீட்டுக்குள் இறக்கி வைத்தனர். தகவல் அறிந்து ஆவேசமாக வந்த ரூபினியின் உறவினர்கள் , தங்கள் வீட்டுப்பெண் கொலை செய்யப்பட்டு விட்டதாக கூறி அன்பழகனை அடித்து சட்டையை கிழித்து ஓடவிட்டதோடு, அவரது முதல் மனைவி மற்றும் தாய் தந்தையை வீட்டிற்குள் பூட்டி சிறை வைத்தனர்.

கரண்டி, தோசை தவா உள்ளிட்டவற்றால் ரூபினியின் உடலில் பல இடங்களிலும் சூடு வைத்து அன்பழகன் சித்ரவதை செய்திருப்பதாக பெண்ணின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் வீட்டில் சிறைவைக்கப்பட்டவர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

சம்பவம் தொடர்பாக மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார் மனைவியின் உயிரிழப்புக்கு காரணமானதாக அன்பழகனை கைது செய்தனர், பிணக் கூறாய்வில் ரூபினி கொலை செய்யப்பட்டது உறுதியானால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்படும் என்றனர்.

அதே நேரத்தில் ரூபினியை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதை தட்டிக்கேட்ட போதே ரூபினியின் தந்தையையும், சகோதரரையும் அன்பழன் அரிவளால் வெட்டியதாக கூறப்படுகின்றது. அப்போதே பலாத்கார வழக்கில் அவனை சிறையில் தள்ளாமல், அவனுக்கே ரூபினியை 2 வது தாராமாக கட்டிவைத்ததால் இந்த உயிரிழ்ப்பு நிகழ்ந்துள்ளதாக சிலர் வேதனை தெரிவித்தனர்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments