6 வருடங்களாக தலைமறைவாக இருந்த ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்..
மூன்று கொலை வழக்குகளில் 6 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த ரவுடியை சென்னையில் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக ஓட்டேரி போலீசார் தெரிவித்தனர்.
ஹரி என்ற அறிவழகன் மீது கொலை வழக்குகள் உள்பட 12 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் நண்பருக்காக அவர் காத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று ஹரியை சுற்றி வளைத்தபோது அவர் தப்பிக்க முயற்சித்த கூறப்படுகிறது.
மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியால் போலீசாரை நோக்கி ஹரி சுட முயற்சித்தபோது, தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் பிரேம்குமார் துப்பாக்கியால் சுட்டதில் அவரது காலில் குண்டடி பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பீகாரில் இருந்து கள்ள துப்பாக்கியை வாங்கியதாக ஹரி வாக்குமூலம் அளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Comments