வெள்ளம் வடிந்த பகுதிகளில் பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு சீருடைகள், பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன..
பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இயல்பு நிலை திரும்பியதை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
ஒரு வார கால விடுமுறைக்குப் பிறகு உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிளுக்கு 10,392 சீருடைகளும், 24,080 பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன.
இதனிடையே வெள்ளத்தால் அதிக அளவில் சேதமடைந்த திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Comments