குழந்தையின் பிறந்த நாளுக்கு உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கச் சென்ற போது நேர்ந்த விபத்து.. 11 மாத குழந்தை உயிரிழப்பு
வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மலையம்பாக்கம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 மாத குழந்தை உயிரிழந்தது.
கூடுவாஞ்சேரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான நந்தகுமார் தனது மனைவி அர்ச்சனா உடன் தனது குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவிற்கு உறவினர்களுக்கு அழைப்பிதழ்களை வழங்க ஆட்டோவில் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பெற்றோர் படுகாயமடைந்த நிலையில், ஆட்டோவை நந்தகுமார் வேகமாக ஓட்டிச்சென்றதே விபத்துக்குக் காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.,
Comments