திருத்தணி அருகே யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரித்து வெடிக்கச் செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி தற்கொலை முயற்சி
திருத்தணி அருகே Youtube ஐ பார்த்து வெடி மருந்து தயாரித்து வெடிக்கச் செய்த சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீசார் கைது செய்த நிலையில், அவன் காவல் நிலையத்தில் இருந்த ஸ்டாப்ளர் பின்களை எடுத்து விழுங்கி தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
சஞ்சய் குமார் என்ற அந்த இளைஞனின் நண்பர்கள் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் மூலம் சஞ்சய்குமார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். வெடிகுண்டு மட்டுமின்றி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் யூடியூப் பார்த்து சஞ்சய் குமார் தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது.
Comments