புதுக்கோட்டையில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி 60க்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய தனியார் வங்கி முகவர் கைது
புதுக்கோட்டையில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி 60க்கும் மேற்பட்டோரிடம் ஆவணங்களைப் பெற்று, 70 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்த இண்டஸ் இண்ட் வங்கியின் முகவர் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்களிடம் இருந்து ஆவணங்களை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு கடன் அப்ரூவல் ஆகவில்லை எனக் கூறிய மணிகண்டன், அந்த ஆவணங்களை வைத்து, வேறொரு செல்போன் எண்ணை வங்கியில் கொடுத்து கடன் பெற்று தனது கணக்கில் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
Comments