கார் மீது லாரி மோதி விபத்து.. பலத்த சேதமடைந்த காரின் கண்ணாடியை உடைத்து 4 பேர் படுகாயங்களுடன் மீட்பு
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே கள்ளபிரான்புரம் என்ற இடத்தில் கான்கிரீட் மிக்சர்‘லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தடுப்புச்சுவரைத் தாண்டி கார் மரத்தில் மோதி கவிழ்ந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை முன்பக்க கண்ணாடியை உடைத்து படுகாயங்களுடன் மீட்டனர்.
Comments