ராணுவத்தில் சேர பயிற்சி என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் பசவரமணா என்பவர், இந்தியன் ஆர்மி காலிங் என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்தி ராணுவம் உள்ளிட்ட முப்படைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வேலை என்ன ஆச்சு என்றும், பணத்தைத் திருப்பிக் கொடு என்றும் கேட்பவர்களை மிரட்டி தாக்குவதாகவும் கூறப்படுகிறது.
2023-ல், இளைஞர் ஒருவரை கேபிள் வயரால் அவர் கொடூரமாக அடிப்பது போன்ற வீடியோவை பார்த்த அமைச்சர் நாரா லோகேஷ், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
Comments