வாகன சோதனையில் வழிப்பறிக் கொள்ளையர்கள் 5 பேர் சிக்கினர்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தமிழக ஆந்திர எல்லையில் 5 வழிப்பறிக் கொள்ளையரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது ஆந்திராவில் இருந்து 2 சக்கர வாகனத்தை திருடிவந்த 2 பேரையும் காரில் வந்த 3 பேரையும் பிடித்தனர்.
காரைக்கால் பகுதியை சேர்ந்த அவர்கள் 5 பேரின் மீதும் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments