ரூ.58.70 கோடி முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் 58 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூரில் 42 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் மற்றம் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே 15 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Comments