ஈரோட்டில் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டம்
ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசியல் கட்சிகள், வியாபாரி சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
மந்தை புறம்போக்கு நிலத்தில் கட்டப்படும் வணிக வளாகப் பணியை கைவிடுதல், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சேகரிப்பு நிலைய கட்டுமானங்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
பால், மருந்து உள்ளிட்ட பொருட்கள் விற்பனை கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன.
Comments