த.வெ.க. தலைவர் விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு
வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளிலும் திமுக வெல்லும் என்ற நம்பிக்கை வீணாகும் என அரசியல் தெரியாத தற்குறிகள் பேசி வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொடி சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணை இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, களத்திற்கே வராதவர்கள் அதிமேதாவிகள் போல் பேசுவதாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் கூறினார்.
Comments