கடலூரில் குடும்ப அட்டைதாரருக்கு ரூ.2,000 நிவாரண உதவி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கும் நிவாரண உதவியை கடலூர் குண்டுஉப்பலவாடியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 390 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
Comments