மண்சரிவால் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்தாருக்கு இபிஎஸ் ஆறுதல்
திருவண்ணாமலையில் மண்சரிவால் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தலா ஒரு லட்ச ரூபாய் காசோலையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
முன்னதாக உயிர் இழந்த ஏழு நபர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி அவர் அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் அரிசி ஆகியவற்றை வழங்கினார்.
Comments