ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் எ.வ.வேலுவின் காலில் விழுந்து அழுத பெண்..
ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு பகுதிக்குச் சென்ற அமைச்சர் எ.வ.வேலுவின் காலில் விழுந்து பெண் ஒருவர் கதறி அழுதார்.
காலில் விழுவது மற்றும் அழுவதை நிறுத்தக்கோரிய எ.வ.வேலு, வாயால் சொன்னால் போதும் என்றார்.
பின்னர், உடை, உணவு உள்ளிட்ட எதுவும் இல்லை எனக் கூறிய பெண்ணிடம், அனைத்தும் வீடுதேடி வரும் என்றும் எ.வ.வேலு ஆறுதல் தெரிவித்தார்.
Comments