போரூர் ஏரியில் மிதந்த வணிக வரித்துறை அதிகாரி உடல்..
சென்னை போரூர் ஏரியில் இருந்து வணிக வரித்துறை துணை ஆணையர் செந்தில்வேல் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அம்பாள் நகரைச் சேர்ந்த செந்தில் வேல் செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு வணிக வரித்துறை அலுவலகத்தில் துணை ஆணையராக பணியாற்றி வந்தார்.
இவரது உடல் போரூர் ஏரியில் மிதப்பது தெரியவந்தது.
கடந்த 8 மாதத்திற்கு முன்பு வாங்கிய வீட்டு கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் அவர் இருந்து வந்ததாக கூறப்படுவதால் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments