புஷ்பா-2 சிறப்புக்காட்சி திரையிடலின்போது கூட்ட நெரிசல் - பெண் உயிரிழப்பு..
FDFS எனப்படும் முதல்நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும், மகன் விரும்பியதால், குடும்பத்தோடு சென்று, மனைவியை இழந்து விட்டதாக, புஷ்பா-2 சிறப்புக்காட்சி பார்க்கச் சென்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான பெண்ணின் கணவர் கூறியுள்ளார்.
ஹைதராபாத் சந்தியா திரையரங்கில், நேற்று முன்தினம் இரவு 9.40 மணிக்கு, புஷ்பா-2 சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது.
ரசிகர்களுடன் சேர்ந்து சிறப்புக் காட்சியை காண அல்லு அர்ஜூன் வந்தபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண் பலியான நிலையில், மூச்சுத் திணறலுடன், அவரது மகன் சிகிச்சை பெற்று வருகிறான்.
Comments