ஹங்கேரி மீன்காட்சியகத்தில் பராமரிக்கப்படும் சுறா மீன்களுக்கு சிறப்பு உணவு
ஹங்கேரி நாட்டில் நீர்வாழ் காட்சிசாலையில் பராமரிக்கப்படும் சுறா மீன்களுக்கு சிறப்பு உணவை கிறிஸ்துமஸ் தாத்தா வழங்கினார்.
புடாபெஸ்ட் நகரில் மீன்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டுகளில் இறங்கிய கிறிஸ்துமஸ் தாத்தா, கையில் வைத்திருந்த மீன்களை சுறாக்களுக்கு வழங்கினார்.
கிறிஸ்துமஸ் விடுமுறை சீசன் தொடங்கியதை அடுத்து மீன்காட்சியகத்தை பார்வையிட வந்திருந்த சிறுவர்கள், சுறா மீன்களை கண்டுகளித்தனர். அக்குவாரியத்தில் நீந்தியபடி சிறுவர்களுடன் கிறிஸ்துமஸ் தாத்தாவும் விளையாடினார்.
Comments