“பார்க்காம இருக்க முடியல.. நண்பரின் ஆசைக்காக காதலி கொடூர கொலை..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது வெண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்த 45 வயது பெண் கடந்த கடந்த 25 ஆம் தேதி சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக கூறிச் சென்றவர் மாயமானார்.
புகாரின் பேரில் சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் , அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வைத்து அவருடன் கடைசியாக பேசி இருந்த சேலம் கோரிமேடு, தாமரை நகர் பகுதியை சேர்ந்த பூண்டு வியாபரி கனகராஜை பிடித்து விசாரித்தனர்.இதில் அந்த பெண் மாயமான வழக்கில் திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
ஊர் ஊராக பூண்டு வியாபாரம் செய்து வந்த கனகராஜ் , வெண்ணந்தூர் சென்ற போது அந்தப் பெண் தனது செல்போன் நம்பரை கொடுத்து பழகி உள்ளார். இருவரும் ஏற்காடு மற்றும் கொல்லிமலைக்கு சென்று உல்லாசமாக சுற்றி திறிந்த நிலையில் தனது காதல் வாழ்க்கை குறித்து வெல்டிங் பட்டறை நடத்திவரும் தனது கூட்டாளி சக்திவேலுவிடம் தெரிவித்துள்ளார் கனகராஜ்.
கூட்டாளி சக்திவேல் யோசனைப்படி கடந்த 25 ஆம் தேதி கனகராஜ் , அந்தப்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு சேலத்திற்கு வரவழைத்துள்ளார். அவரை அழைத்துக் கொண்டு ஏற்காடு மலை அடிவாரம் , செக்போஸ்ட் பின்பக்கம் இருக்கும் அடர்ந்த காட்டு பகுதிக்கு சென்றுள்ளார் கனகராஜ் . அவர்களை கூட்டாளி சக்திவேலுவும் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
காதலர்கள் இருவரும் காட்டுப்பகுதியில் தனிமையில் இருந்த போது அங்கு சென்ற சக்திவேல் , அந்த பெண்ணிடம் அத்துமீறியுள்ளார். அவருடன் சண்டையிட்டு தப்பிச்செல்ல அந்த பெண் முயன்ற நிலையில், கனகராஜும் , சக்திவேலுவுடன் சேர்ந்து , அப்பெண்ணை கொடூரமாக தாக்கி பலாத்காரம் செய்து , கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகின்றது.
பின்னர் அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த கவரிங் செயினை தங்கம் என நினைத்து கழற்றி எடுத்துக் கொண்டு சடலத்தை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் வீசிவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கனகராஜ் இது போல ஏராளமான பெண்களிடம் பழகி வந்தது செல்போன் தொடர்புகள் மூலம் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், கூட்டாளி சக்திவேலுவுடன் சேர்ந்து கனகராஜ் இது போன்று வேறு ஏதும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments