“போலீசுன்னா பொங்கல்... சாப்பிடுறவங்கன்னு நெனச்சியா..? அல்லு அர்ஜூன் மீது எப்.ஐ.ஆர்..! ரசிகை பலிக்கு காரணமானதாக வழக்கு
திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்த ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவத்தில் கவனக்குறைவான நடவடிக்கையால் உயிர்பலி நிகழ காரணமாக இருந்ததாக நடிகர் அல்லு அர்ஜூன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
போலீசாருக்கு தகவல் சொல்லாமல் திரையரங்கிற்கு வந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிர் பலி நிகழ காரமாணதாக ஐதராபாத் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா 2 படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார் .அவரது குழந்தையை மீட்டு போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்த போலீசார் ,அந்த திரையரங்கிற்கு நடிகர் அல்லு அர்ஜூன் வந்ததால் கடும் நெரிசல் உண்டானதாகவும், முன் கூட்டியே திரையரங்கு நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பதால் போதிய பாதுகாப்பு இல்லாமல் இந்த உயிர்பலி நிகழ்ந்திருப்பதாகவும் தெரிவித்தனர் . இதையடுத்து கவனக்குறைவான செயல்பாடு காரணமாக அல்லு அர்ஜூன் அவரது பாதுகாவலர்கள் மற்றும் திரையரங்கு நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
புஷ்பா 2 படத்தில் போலீஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவது போல பஞ்ச் அடித்து அல்லு அர்ஜூன் நடித்திருந்த நிலையில் நிஜத்தில் இந்த வழக்கு மூலம் அல்லு அர்ஜூனுக்கு போலீஸ் செக் வைத்திருப்பதாக திரை விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
Comments