மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார் தேவேந்திர பட்னாவிஸ்..!
மகாராஷ்ட்ராவின் 18ஆவது முதலமைச்சராக பாரதிய ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றுக் கொண்டார்.
மும்பையின் ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ஆளுநர் ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து துணை முதலமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் இருவரும் அடுத்தடுத்து பதவி ஏற்றனர்.
முதலமைச்சரும், துணை முதலமைச்சர்களும் தங்கள் தாய்மொழியான மராட்டியிலேயே உறுதி மொழிகளை வாசித்து ஆண்டவன் சாட்சியாக எனக்கூறி பதவி ஏற்றனர்.
பதவி ஏற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், மாநில முதலமைச்சர்கள் சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். தொழிலதிபர் முகேஷ் அம்பானி, இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், முன்னாள் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
Comments