பாபா சித்திக்கை கொலை செய்வதற்கு முன் சல்மான் கானை கொல்ல கொலையாளிகள் திட்டம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக்கை கொலை செய்வதற்கு முன் பாலிவுட் நடிகர் சல்மான் கானை சுட்டுக்கொல்ல திட்டமிட்டதாக கொலையாளிகள் தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 12-ஆம் தேதி மும்பையில் மர்ம நபர்களால் பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக 5 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சல்மான் கானை கொல்ல திட்டமிட்டதும், உயர் பாதுகாப்பு வளையத்தில் அவர் இருந்ததால் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்று கொலையாளிகள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments