கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையடிவார கிராமங்களில் மழையால் பயிர்கள் சேதம்
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களில் வாழை மரங்கள் சாய்ந்தும், மக்காச்சோளம், மரவள்ளி, நெற்பயிர்கள் உள்ளிட்டவை மழைநீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பொட்டியம், மாயம்பாடி, மல்லிகைப்பாடி, ஊத்தோடை, காட்டுக்கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் பாதித்து நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
Comments