சுக்பீர் சிங் பாதலை நோக்கி துப்பாக்கிச்சூடு

0 573

பஞ்சாபில் அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

2007ல் சீக்கிய மதத்தை அவமதித்துப் பேசிய தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மத நிந்தனை வழக்கில் அப்போதைய துணை முதலமைச்சர் சுக்பிர் சிங் பாதல், தனது அதிகாரத்தை பயன்படுத்தி மன்னிப்பு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 

இது குறித்து விசாரித்த சீக்கிய உயரதிகார அமைப்பான அகால் தக்த், சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோருக்கு பொற்கோவில் பாத்திரங்களை கழுவுவது உள்ளிட்ட தண்டனைகளை வழங்கியது.

இதனையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கான அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு பொற்கோவிலில் அவர்கள் தண்டனையை நிறைவேற்றி வந்தனர். இந்நிலையில், இன்று காலை பொற்கோவிலின் காவலாளியாக வாயிலில் நின்ற பாதலை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

அதிர்ஷ்டவசமாக பாதல் மீது குண்டுபடாத நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுற்றிவளைத்து பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments