விவசாய நிலங்களில் புகுந்த வெள்ளம்.. அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானதால் விவசாயிகள் வேதனை
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தருமபுரி மாவாட்டத்தைச் சேர்ந்த அரூர், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் ,கரும்பு, வாழை , தக்காளி ,கத்தரி பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயத்திற்காக பெற்ற கடனை அடைக்க வழி தெரியாமல் இருப்பதாகவும் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
Comments