இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல் - அண்ணனால் வெட்டிக் கொல்லப்பட்ட காதலன்..
தங்கையை காதலித்த நபரை, கடுமையாக தாக்கி வெட்டிக்கொன்ற வழக்கில், அப்பெண்ணின் சகோதரர், அவரது நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த விஜயகுமார், தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.
இன்ஸ்டாகிராம் மூலமாக திருநெல்வேலியைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி ஜெனிபர் என்பவருடன் பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு அந்த பெண்ணின் சகோதரர் சிம்சன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விஜயகுமாரை கொன்ற வழக்கில் கைதான, சிம்சன் அளித்த வாக்குமூலத்தில், காதலை கைவிட வலியுறுத்தியும் கேட்காததால், சமாதானம் பேசுவதுபோல் நைச்சியமாக பேசி திருநெல்வேலிக்கு வரவழைத்து, நண்பருடன் சேர்ந்து வெட்டிக்கொன்றதாக தெரிவித்துள்ளார்.
Comments