கொடைக்கானலில் சாலையின் குறுக்கே விழுந்த பெரிய மரம்..
கொடைக்கானல் பியர் சோலா சாலையில் உள்ள மசூதி வளாகத்தில் இருந்த பெரிய மரம், சாலையின் குறுக்கே விழுந்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் மேற்பகுதி சேதமடைந்ததோடு, மின்கம்பிகளும் அறுந்து விழுந்ததால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
ஆள் நடமாட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில் மரம் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயணைப்புத்துறையினர் மரத்தை அறுத்து அகற்றினர்.
Comments