எங்கடா இங்க இருந்த பாலத்தை காணோம்..? வெள்ளம் அடிச்சிட்டு போயிடுச்சிண்ணே..! ரூ.16 கோடிக்கும் இனி பேட்ஜ் ஒர்க் தானா ? மாவட்ட நிர்வாகத்தின் வினோத விளக்கம்..

0 723

கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக திறந்து வைக்கப்பட்ட பெண்ணையாற்று பாலம் சுவடில்லாமல் அடித்துச்செல்லப்பட்ட காட்சிகள் தான் இவை..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் பள்ளிப்பட்டு தொண்டமானூர் இடையே சுமார் 16 கோடி றூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு , புதிய பாலத்தை திறந்து வைத்தார்.

பாலத்தை சுற்றுவட்டார மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த 3 தினங்களாக சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் அந்த பாலத்தை மூழ்கடித்து சென்றது. வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் பாலத்தை காணவில்லை.

வெள்ளம் வெகுவாக குறைந்த நிலையில் பாலம் இருந்த சுவடே இல்லாமல் மொத்தமாக வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருப்பது கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்

வெள்ள காலங்களில் பொதுவாக பாலத்தின் கரை பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு உடைப்பு ஏற்படுவது வழக்கம், ஆனால் வழக்கத்துக்கு மாறாக மத்திப் பகுதியில் ஒற்றை தூண் கூட நிற்காமல் அனைத்தும் சரிந்து புதிய பாலம் அடியோடு இழுத்துச்செல்லப்பட்டிருப்பது பாலத்தின் தரத்தின் மீது சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் புதிதாக கட்டப்பட்ட பாலம்
நீரியியல் கணக்கீட்டின்படி 54,417 கன அடி நீரை தாங்கும் திறனுடன் 7 மீட்டர் உயரத்துடன், திறந்த வெளி அடித்தளம் மற்றும் 11 வட்ட வடிவ தூண்களுடன் நல்ல தரத்துடன் கட்டிமுடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். சாத்தனூர் அணையிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாக அதாவது 2,00,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், அணையில் இருந்து 24 கிலோ மீட்டரில் அமைந்திருந்த இந்த புதிய பாலத்திற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் பாய்ந்தோடியதாக குறிப்பிட்டுள்ளனர்.

நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் இப்பாலம் பெரும் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும்,
சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து மீண்டும் பாலம் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY