திருமணிமுத்தாற்று வெள்ள நீர் விவசாயத் தோட்டங்களில் புகுந்தது..
சேலம் திருமணிமுத்தாற்று வெள்ள நீர் கந்தம்பட்டி மற்றும் புத்தூர் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில் புகுந்ததால் கரும்பு ,நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதற்கு ராஜ வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதே காரணம் எனவும் அவர்கள் கூறினர்.
அரசு உடனடியாக திருமணிமுத்தாறு கரையை உயர்த்தி கட்டித் தர வேண்டும் என்றும் சேதமான பயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
Comments