ஃபெஞ்சல் புயலால் அதிக மழைப்பொழிவை சந்தித்த விழுப்புரம்..
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது அதிக மழைப்பொழிவை சந்தித்த விழுப்புரம் மாவட்டத்தில் 3 நாட்களாக கரைபுரண்டோடிய வெள்ளம் பெரும்பாலான பகுதிகளில் வடிந்தது.
கனமழையால் ஏரிகள் நிரம்பி திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி, மரக்காணம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தன.
அரகண்டநல்லூர், அரசூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் மழை குறைந்ததையடுத்து, பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருகிறது.
மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கும், விளைநிலங்களின் வழியே பாய்ந்த தண்ணீரும் குறைந்துள்ளது. இதனால் நீரில் மூழ்கியிருந்த பயிர்கள் தென்படத் தொடங்கின.
Comments