பாலாறு அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை..
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள பாலாறு அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அணைக்கு வினாடிக்கு 2,772 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில் நேரடியாக பாலாற்றில் 1,064 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காவேரிப்பாக்கம் ஏரிக்கு 842 கன அடி, மகேந்திரவாடி ஏரிக்கு 402 கன அடி, சக்கரவல்லூர் ஏரி, தூசி கால்வாய்க்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மழையால் மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 81 ஏரிகள் நிரம்பி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments