எதிர்காலத்தில் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்படாத வகையில் நடவடிக்கை - சேகர்பாபு
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் எதிர்காலத்தில் நிலச்சரிவு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், கார்த்திகை தீபத்திற்கு முன்பாக திருவண்ணாமலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை, ஜார்ஜ் டவுனில் உள்ள பிஆர்.கார்டன் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக குடியிருப்புகள் கட்டுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளரை சந்தித்தார்.
Comments