காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நடந்த திருமணத்தை நிறுத்த முயன்ற காதலி
சென்னை வண்ணாரப்பேட்டை CSI கிருஸ்துநாதர் தேவாலயத்தில் நடைபெற்ற தனது காதலனின் திருமணத்தை நிறுத்துவதற்காக வந்த பெண்ணை போலீசார் குண்டுக்கட்டாக ஆட்டோவில் தூக்கிச் சென்றனர்.
பிரியதர்ஷினி என்பவரும், மணமகன் லிஜினும் இரண்டரை ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகவும், இந்நிலையில் பிரியதர்ஷினி இருமுறை கர்ப்பமாகி கருவைக் கலைத்ததாகவும் கூறப்படும் நிலையில் லிஜினிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பிரியதர்ஷினி போலீசில் புகாரளித்துள்ள நிலையில்தான் லிஜினுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது.
Comments