சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு வேகமாக நிரம்பும் நிலையில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை
சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாளபுரம் அருகே சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஒலிப்பெருக்கி மூலம் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர்.
வெள்ளாளபுரம் ஏரி எந்த நேரத்திலும் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் நுழைய வாய்ப்புள்ளதாக எச்சரித்த நிலையில், வீட்டை விட்டு வெளியேற மறுத்த சிலரிடம் அதிகாரிகள் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டது.
Comments